2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

‘சவக்குழிக்குள் குளவிக் கொட்டு; பெட்டியை காத்தது நாய்’

Princiya Dixci   / 2017 மே 16 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளவிக் கொட்டுக்குப் பயந்து, சவப்பெட்டியை நடுரோட்டிலேயே வைத்துவிட்டு, தப்பியோடி சவக்குழிக்குள் குதித்தவர்கள் மீது குளவிகள் கடுமையாகக் கொட்டிய சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது. 

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள், கலஹா மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடுவீதியில் அநாதரவாக கிடந்த சவப்பெட்டியை, குளவிக் கொட்டு, ஓயும் வரையிலும், நாயொன்று பாதுகாத்தும் உள்ளது.  

கம்பளை, புபுரஸ்ஸ, லேவலன் தோட்டத்தில், கடந்த 11ஆம் திகதியன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 79 வயதான நபரொருவர் இயற்கை மரணமடைந்துவிட்டார். அவருடைய இறுதிக் கிரியைகள் நிறைவடைந்ததன் பின்னர், சவப்பெட்டியை சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்றவேளை, சுடுகாட்டுக்கு அண்மையில் வைத்து, குளவிகள் கலைந்து கடுமையாகக் கொட்டியுள்ளன.  

குளவிக் கொட்டிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, சவப்பெட்டியை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு, சகலரும் நாலாபுறமும் தப்பியோடியுள்ளனர். அதில் நால்வர், சவக்குழிக்குள் ஒழிந்துகொண்டனர். அவர்கள் மீதே, குளவிகள் கடுமையாக கொட்டியுள்ளன.  

சவப்பெட்டியைத் தூக்கிகொண்டு சென்றபோது, கொளுத்தப்பட்ட பட்டாசு வெடியினால், குளவிகள் கலைந்துள்ளதாக அறியமுடிகிறது. சவப்பெட்டியை நடுரோட்டிலேயே வைத்துவிட்டு, தப்பியோடியவர்கள் திரும்பி வரும் வரையிலும் அந்தச் சவப்பெட்டியை, நாயொன்று காவல் காத்துள்ளது. திரும்பி வந்தவர்கள் அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தும் உள்ளனர்.  

சவப்பெட்டியில் இருந்தவரே, அந்த நாயை, வளர்த்தவர் என்றும் அறியமுடிகின்றது. இந்நிலையில், சம்பவம் இடம்பெற்று இரண்டு மணிநேரத்துக்குப் பின்னர், இருட்டியதும், பந்தங்களை கட்டிக்கொண்டு வந்தவர்கள், அந்தச் சடத்தைப் புதைத்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X