2026 ஜனவரி 29, வியாழக்கிழமை

விடிவு காண்கிறது மறிச்சுக்கட்டி

Princiya Dixci   / 2017 மே 16 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

1990ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளினால், முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் முசலி மற்றும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அந்த பிரதேசங்களை நீக்கி, வனப் பாதுகாப்பு பிரதேசப் பிரகடனத்தை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி செயலாளர் பி.பிஅபேயகோன் இணக்கம் தெரிவித்தார்.

முசலி பிரதேசத்தில் மாவில்லு வனப் பாதுகாப்பு பிரகடனத்தினால் அப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையிலான உயர்மட்ட மாநாடொன்று , ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) காலை நடைபெற்றபோது, ஜனாதிபதி செயலாளர் இந்த இணக்கத்தை வெளியிட்டார்.

 முஸ்லிம் இயக்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸின் தலைமையில், முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் சிவில் இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், வனபாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் முசலி பிரதேசத்தில் பூர்வீக காணிகள் தொடர்பாக மக்கள் கருத்துக்களை அறிந்து அறிக்கையொன்றை  சமர்ப்பிப்பதற்கான மூவர் அடங்கிய சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதென இச்சந்திப்பு தொடர்பாக முஸ்லிம் கவுன்ஸில் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X