2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘காணொளியில் ஐயா இருட்டடிப்பு‘

Kogilavani   / 2017 மே 16 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நோர்வூட் மைதானத்துக்கு வந்திருந்த போது, காண்பிக்கப்பட்ட காணொளியில், மலையகத்தின் மாபெரும் மகானான சௌமியமூர்த்தி தொண்டமான் பற்றிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை” என்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. 

எனினும், “அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இல்லாத மலையகத்தை யாரும் காணமுடியாது என்பதை முழு உலகமே அறிந்துவைத்துள்ளது என்றும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.   

காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில், நேற்று (16) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, காங்கிரஸின் உப-தலைவரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் கல்வியமைச்சருமான எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,   

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நோர்வூட் கூட்டத்தில், சௌமியமூர்த்தி தொண்டமானை புகழ்ந்து பேசியதனூடாக, தொண்டமானை உலகமே அறிந்துவைத்துள்ளது. அதனை இந்தியப் பிரதரும் அதனை பறைசாற்றியுள்ளார்.   

இந்தியப் பிரதமர் மோடியின் இக்கருத்தை முற்போக்கு கூட்டணியையும் மலையக அமைச்சுகளையும் சிறுமைப்படுத்திவிட்டது”    “நோர்வூட் மைதானத்தில் அன்றையதினம், மலையக வரலாற்றை கூறும் வகையில் ஒரு காணொளி ஒளிபரப்பட்டது. மலையக மக்களுக்கு சேவையாற்றிய தலைவர்களாக சி.வி.வேலுப்பிள்ளை, நடேசைய்யர் ஆகியோரை மட்டும் பிரதானப்படுத்தியதாக அந்தக் காணொளி அமைந்திருந்தது.   

15 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், மலையகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு வழியமைத்துக்கொடுத்த மாபெரும் மகானான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை, அந்தக் காணொளியில் இல்லாமல் செய்துள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X