2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

இலங்கை - கனடா இடையே விமானசேவை உடன்படிக்கை

Princiya Dixci   / 2017 மே 17 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் முறையான விமான சேவையினைக் கட்டியெழுப்பும் நோக்கில், விமான சேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாடு சென்றுள்ள அதிகமான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்வித விமான சேவை உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை.

எனவே, இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமான சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில், தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள முன்மொழியப்பட்டுள்ள விமானசேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .