2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

10 அம்புலன்ஸ்கள் உஷார்

Kanagaraj   / 2017 மே 18 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை, சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடத்தின் ஒருபகுதி, இடிந்து விழுந்ததில், காயமடைந்த 21பேர், களுபோவில மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

இந்நிலையில், அந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

ஆகையால், சவோய் திரையரங்கை அண்மித்த பகுதியில் சுமார் 10 அம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொழும்பு-காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள், அம்புலன்ஸ் மற்றும் அங்கு விரைந்த முச்சக்கரவண்டிகளின் ஊடாகவே வைத்தியசாலைகளுக்கு உடனடியாக எடுத்துசெல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .