வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014
 

இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றம்


இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது

இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களானவை பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5  தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று நிறைவேற்றியது.

இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 36 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மாத்திரம் இத்தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்தது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தான்  இப்பிரேரணையை முன்வைத்தது. கியூபா, வெனிஸுலா முதலான நாடுகள் இதற்கு இணை அனுசரணை வழங்கின. நோர்வே, சுவிட்ஸர்லாந்து, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியனவும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இத்தாலி,  ஸ்பெய்ன், செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, மோல்டாவியா, கௌதமாலா, கொஸ்டாரிக்கா, கெமரூன் உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இத்தீர்மானம் வெளிவேஷம் கொண்டது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு விமர்சித்துள்ளார்.

இது இரட்டைவேடத் தனமான, அநீதியான, அழிவேற்படுத்தும் தீர்மானம் எனவும் பிராந்தியத்தில் மேலும் பதற்றநிலையை ஏற்படுத்தும் எனவும் இஸ்ரேலிய தூதுவர் அஷாரொன் லெஷானோ யார் கூறினார்.

இஸ்ரேலானது இருநாடுகள் கொள்கையில் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பலஸ்தீனர்களுடன் நேரடி இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க வேண்டுமென இஸ்ரேல் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இப்பிரேரணையை பலஸ்தீன அதிகார சபை வரவேற்றுள்ளது.

Views: 4722

Comments   

 
-0 +0 # mohamed 2012-03-24 10:21
itha kadayam seiyanum
Reply
 
 
-0 +0 # raj 2012-03-24 10:26
அமெரிக்கா எனும் நடிகர் இஸ்ரேலுடன் இருக்கும் வரை. ஒன்றும் நடக்கப்போவது இல்லை. இஸ்ரேலின் பின்னணியில் அமெரிக்கத்தான் எல்லாம் என்று. நாம் அறிவோம். இதை இலங்கைக்கு விரோதமாக வாக்களித்த நாடுகளும் உணர வேண்டும் .
Reply
 
 
-0 +0 # ஜெமீல் - ஓட்டமாவடி 2012-03-24 23:34
உலகில் சிறுவா்களை அதிகமாகக் கொல்லும் ஒரே நாடான இஸ்ரேலுக்கெதிரான எந்தத் தீா்மானத்தையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் , அமெரிக்க அரசியல் ,பொருளாதார காரணிகளில் அதிக செல்வாக்குச் செலுத்துவது இஸ்ரேலாகும். நமது தாய்நாட்டிற்கெதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீா்மானம்கூட மனிதாபிமானத்தைக் காப்பதற்காக அல்ல, மாறாக , அமெரிக்க நலன்களை காப்பதற்காகும். அது பச்சைச் சுயநலம்.. யாராவது அமெரிக்கா நமக்காக வாதாடுகிறது என்று நினைத்தால் அது அவர்களது அறியாமையும் உலகரிவில் பலவீனத்தையுமே குறிக்கும்.
Reply
 
 
-0 +0 # buhary 2012-03-25 08:30
அமெரிக்காவின் செயலானது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதற்கு சமமானது. இஸ்லாமிய உலகு உனக்கு மிக விரைவில் பாடம் புகட்டும்.
Reply
 
 
-0 +0 # pithamahan 2012-03-26 00:18
கண்துடைப்பு
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.