Dailymirror
| Mirrorsports | Life | Editorblog | Advertise with Us
செவ்வாய்க்கிழமை, 02 செப்டம்பர் 2014
 
 

யாழில் இந்திய எம்.பிக்கள்



ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவினர் இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

விசேட உலங்கு வானுர்தி மூலம் யாழ். மத்திய கல்லூரியில் வந்திறங்கிய இத்தூதுக்குழுவினரை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சில்வேஸ்திரி அலன்ரின், முருகேசு சந்திரகுமார் மற்றும் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் வரவேற்றனர்.

இவர்களின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த பொதுமக்கள், இந்திய தேசிய  கொடியை ஏந்தியவாறு இக்குழுவினரை வரவேற்றனர்.

ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இவர்கள் யாழ். ஞானமஸ் ஹோட்டலில் தங்கி, பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர். (கவிசுகி, பிரசாத்)











Views: 1368

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.