வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014
 

மாற்று வலுவுடையோருக்கு உதவி

(கண்ணன்)

யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த மூன்று பிரிவுகளை சேர்ந்த மாற்று ஆற்றலுடையவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

பருத்தித்துறை, சங்காணை, சாவகச்சேரி ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.

மாற்று ஆற்றலுடைய பிள்ளைகள்கள், அவர்களுடைய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், அதிக பிள்ளைகளைக் கொண்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் என பிரிவுகள் ரீதியாக இந்த உதவிக்கான தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.

தெரிவு செய்யப்பட்டோரில் 40 பேருக்கு சுய தொழில் மேற்கொள்வதற்கென தலா 25 ஆயிரம் ரூபாவும் மாதாந்தம் 50 பேருக்கு உடனடி தேவைகளுக்கென ஆறாயிரம் ரூபா வீதமும் 10 பேருக்கு பழுதடைந்த உபகரணங்களை திருத்தம் செய்வதற்கென நாலாயிரம் ரூபா வீதமும் 13 பேருக்கு மாற்று வழுவுடையோர் வசதிகளை பூர்த்தி செய்யவென தலா 15 ஆயிரம் ரூபாவீதமும் 66 பேருக்கு அவசர போக்குவரத்திற்கு உதவியாக 1இ500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

கிராம சேவையாளர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை அதிகாரிகள் ஆகியோர் பயனாளிகளை தெரிவு செய்து அனுப்பிவைக்குமாறு  மாகாண சமூக சேவைகள் திணைக்கள யாழ்.மாவட்ட அலுவலகர் அ.ஞானவேல் தெரிவித்தார்.

Views: 3240

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.