காத்தான்குடி பாடசாலைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வு
24-02-2012 03:41 PM
Comments - 0       Views - 397

 

(எம்.சுக்ரி)

கல்வியமைச்சின் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் திருமதி ஜே.மாலினி பெர்ணான்டொ இன்று வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடியிலுள்ள சில பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அப்பாடசாலைகளின் நிலவரங்களை பார்வையிட்டார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த இவர், காத்தான்குடி மில்லதட் மகளிர் வித்தியாலயம், ஸாவிய்யா மகளிர் வித்தியாலயம், மீராபாலிகா மகா வித்தியாலயம் ஆகிய தேசிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்த பணிப்பாளர் மாலினி பெர்னான்டோ, அங்கு அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.அஸ்பர் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

"காத்தான்குடி பாடசாலைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வு " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty