.
வெள்ளிக்கிழமை, 24 ஒக்டோபர் 2014

 

வாகரையில் இளைஞர் கடத்தல்

                                                                                              (ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வானில் வந்த இனந்தெரியாதோரினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸில், உறவினர்கள் நேற்று புதன்கிழமை இரவு முறைப்பாடு செய்துள்ளனர்.

பால்சேனையைச் சேர்ந்த  தணிகாசலம் ஆனந்த கிசோத் (வயது 22) என்ற இளைஞரே கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று புதன்கிழமை இரவு வேளையில் இவ் இளைஞரின் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத நபர்கள், கடத்தப்பட்ட இளைஞரின் தந்தையை விசாரித்ததாகவும் அவர் வீட்டில் இல்லாத நிலையில் இவ் இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக  வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வாகரைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Views: 1818

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.