
(அப்துல் அஸீஸ்)
கல்முனை மாநகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சாப்பு சட்டம் கல்முனை மாநகர பிரேசங்களில் நேற்;று வெள்ளிக்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதற்கமைவாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் கல்முனை நகர் சுற்று வட்டம் வரையான பகுதி, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள கடைகள் பூட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில் கல்முனை நகர் சுற்று வட்டத்திற்கு அப்பாலுள்ள தமிழ் பிரதேசங்களிலுள்ள கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதேவேளை, இப்பிரதேசங்களிலுள்ள கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டப்படவுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கல்முனை மாநகர சபை தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே சாப்பு சட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை அறிமுகப்பட்டுத்தப்பட்டது.
இதேவேளை, ஒரு மாநகர சபை பிரதேசத்திற்குள் இரு வகையான நாட்களில் சாப்பு சட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



.gif)

Comments
சபாஷ் சரியான நீதி
இதுபோல் மட்டக்களப்பு நகரில் ஞாயிற்றுக் கிழமைகளில் முஸ்லிம் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுமா?....
RSS feed for comments to this post