வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014
 

மத்திய மாகாண சபையின் தலைவர் சாலிய திசாநாயக்கா தாக்கியதாக முறைப்பாடு

(சுபுன் டயஸ், சீ.எம்.ரிஃபாத்)

அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவின் சகோதரரும் மத்திய மாகாண சபையின் தலைவருமான சாலிய திசாநாயக்கவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டதாக ஹங்குரன்கெத்த பிரதேச சபை தலைவர் ரணசிங்க பண்டார பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் கமநெகும அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதேச சபைத் தலைவர் தலைமையில் இன்று நண்பகல் நடைபெற்றது.

இதன்போது, அங்கு திடீரென நுழைந்த சாலிய திசாநாயக்க,  கற்களால் பிரதேச சபை தலைவரை தாக்கியதாக ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதேச சபை தலைவர் ரணசிங்க பண்டார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபையின் தலைவர் சாலிய திசாநாயக்காவின் சுமார் 8.4 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பஸ்கள் ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Views: 1779

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.