செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

'நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டு, தேசிய செயற்திட்டத்தை ஜெனீவாவில் சமர்ப்பித்தமை அரசியலமைப்புக்கு முரண்'

 

(யொஹான் பெரேரா)

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான அரசாங்கத்தின் தேசியக் கொள்கை செயற்திட்டத்தை  நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்தமை அரசியலமைப்புக்கு முரணானதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று  கூறினார்.

நாடாளுமன்றத்திற்கு பதிலளிப்பதற்கு  அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாகவும் தனியாகவும் பொறுப்புடையவர்கள் என்ற அரசியலமைப்பின் 43 ஆவது ஷரத்தை மேற்படி நடவடிக்கை மீறியுள்ளது என அவர் கூறினார்.

மேற்படி தேசிய செயற்திட்டத்தின் பிரதிகளை நாடாளுமன்றத்தை புறக்கணித்துவிட்டு ஜெனீவாவில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்றத்திற்கு முக்கிய தகவலொன்றை அமைச்சரவை கொடுக்காமல் விட்டுள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

Views: 415

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.