வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014
 

ஜே.வி.பி. மாற்றுக்குழுவின் தலைவர் பிரேம்குமார் குணரட்னம் கைது

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான குமார மஹாத்தயா என அழைக்கப்படும் பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான  திமுத்து ஆட்டிகல ஆகியோர்  கைது செய்யப்பட்டுள்ளதாக  முற்போக்கு சோசலிசக் கட்சி  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரேம்குமார் குணரட்னம் கிரிபத்கொடையில் வைத்தும், திமுத்து ஆட்டிகல தலவத்துகொடயில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஜனக சுதார தெரிவித்தார். இது தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது இக்கைது குறித்து தமக்குத் தெரியாது எனக் கூறினர்.

பிரேம்குமார் குணரட்னம் தலைமையிலான ஜே.வி.பி மாற்றுக்குழுவினர் மக்கள் பேராட்ட  இயக்கத்தையும் முற்போக்கு சோசலிசக் கட்சியையும் ஸ்தாபித்தனர். அதேவேளை  திமுத்து ஆட்டிகல, சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் எனும் புதிய அமைப்பின் தலைவியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.  (எச்.எவ்)

Views: 2676

Comments   

 
-0 +0 # AJ 2012-04-08 04:15
லங்காவை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.