ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014
 

ஐ.நா. சமவாயத்தை அரசாங்கம் மீறியுள்ளது: ஜே.வி.பி.


(யொஹான் பெரேரா)


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் வசித்த மீன்பிடித்தலை ஜீவனோபாயமாக கொண்டிருந்த இடம்பெயர்ந்த மக்களை அகதிகள் தொடர்பான ஐ.நா. சமவாயத்திற்கு முரணாக அதே மாவட்டத்தின் திம்பிலி கிராமத்தில் அரசாங்கம் இடம்மாற்றியுள்ளது என ஜே.வி.பி. இன்று குற்றம் சுமத்தியுள்ளது.

400 பேர்ச் காணியொன்றில் இம்மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், கடற்கரையிலிருந்து  தொலைவில் உள்ளதால் அவர்களால் ஜீவனோபாயத்தை மீள ஆரம்பிக்க முடியாதுள்ளதாகவும் ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் கூறினார்.
ஐ.நா. சமவாயத்தின்படி, இது மீள்குடியேற்றமல்ல இடமாற்றம் என அவர் கூறினார். இம்மக்களை மீள்குடியேற்றுவதற்காக காடுகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தாம் முன்னர் வசித்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டுமென அண்மையில் மெனிக்பார்ம் முகாமுக்கு விஜயம் செய்த இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவிடம் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எந்த அதிகார பரவலாக்கலையும் கோராத நிலையில், இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவும் இலங்கை அரசாங்கமும்  பேசும் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அதிகார பரவலாக்கம் குறித்து பேசுவது பயனற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

'அரசாங்கம் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அவ்வப்பேது அதிகாரவலாக்கம் குறித்து பேசுவதிலும் அதை மறுப்பதிலும் நேரத்தை விரயமாக்க கூடாது என அவர் தெரிவித்தார். படங்கள்:நிசால் பதுகேViews: 1458

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.