திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014
 

புலிதேவனின் சகோதரன் புலிமாறன் யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுதலை

                                                                                  (கவிசுகி)

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலிதேவனின் சகோதரர் சீவரெத்திணம் பாலதயாகரன் (புலிமாறன்) குற்றமற்றவர் என யாழ்.மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்துள்ளது

கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி பேர்பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட புலிமாறன் என்று அழைக்கப்படும் சீவரெத்திணம் பாலதயாகரன் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றமை, புலிகளுடன் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக இவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு தெடுக்கப்பட்டது

இதில் புலிமாறனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவை எனவும் இவரது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மார்ச் 26 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டு இவருக்கு எதிராக வேறு சான்றை மன்றில் சமர்பிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன் அரச சட்டத்தரணி திருக்குமரனுக்கு உத்தரவிட்டார்

இன்று வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது அரச சட்டத்தரணியால் புலிமாறவுக்கு எதிராக வேறு சான்று இல்லை என தெரிவித்தமையை அடுத்து புலிமாறனை குற்றமற்றவர் என விடுதலை செய்கின்றேன் என தனது தீர்ப்பில் விடுதலை செய்தார் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன்

புலிமாறன் சார்பாக பிரபல சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் ஆஜராகியிருந்தார் குறிப்பிடத்தக்கது

Views: 1593

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.