.
ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014
 

மதுபான நிலையங்கள், கசினோ, இரவு விடுதி, இறைச்சி கடைகள் 3 தினங்களுக்கு மூடப்படும்

(சுபுன் டயஸ்)

வெசாக் தினத்தை முன்னிட்டு மே 4, 5, 6 ஆம் திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள், சூதாட்ட நிலையங்கள், கசினோக்கள், இரவு விடுதிகளை  மூடுவதுடன் சுப்பர் மார்க்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்வதை தடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்மூன்று தினங்களிலும் இறைச்சிக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தினங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் தொடர்பாக 011-2300660, 011-2300170, 011-2300166 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் முறைப்பாடு செய்யலாம் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Views: 1260

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.