புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014
 

கிழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சம்பந்தன் கோரிக்கை

                                                                          (கெலும் பண்டார)

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சிலரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி தலையிட வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்படாத எல்.ரி.ரி.ஈ. முன்னாள் செயற்பாட்டாளர்கள் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியானதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல்களை மேற்கொண்டனர். திருகோணமலையில் ஈபிடிபி கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து இந்நடவடிக்கைள் ஆரம்பமாகின.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞரக்ள் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதமொன்றில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  கோரியுள்ளார்.


Views: 1230

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.