சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014
 

ஜெனரலுக்கான யுத்த வீரர்கள் சங்கத்தின் கூட்டத்தில் பொன்சேகா உரை

                                                                               (நபீலா ஹுஸைன்)

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற வீரர்களின் சங்கமொன்றின் கூட்டத்தில், தனது எதிர்கால அரசியல் தி;ட்டங்கள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று சனிக்கிழமை உரையாற்றவுள்ளார்.

'ஜெனரலுக்கான யுத்த வீரர்கள் சங்கமானது' முன்னாள் இராணுவத் தளபதியின் ஜனநாயக வரம்புக்குள்ளான அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கும் என அச்சங்கத்தின் செயலாளரான ஓய்வுபெற்ற கப்டன் ராஜு டி சில்வா கூறினார். சரத் பொன்சேகாவின் வழிகாட்டிலின் கீழ் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதிற்கு தமது சங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொன்சேகாவின் விடுதலைக்காக தமது அமைப்பு சுவரொட்டிகள், மகஜர் கையெழுத்து உட்பட பல்வேறு பிரசாரங்களை தமது சங்கம் மேற்கொண்டதாகவும் அவரின் சிவில் உரிமைகளை மீள நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

ஜெனரலுக்கான யுத்த வீரர்கள் சங்கத்தின் கூட்டமானது, பிட்டகோட்டே சோலிஸ் ரெய்ன்போ மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Views: 3201

Comments   

 
-1 +1 # Hamzath 2012-06-16 08:18
மீண்டும் சிறைச்சாலையின் சாப்பாடு வாசம் வீசிகின்றது. ஆனால் இந்த முறை பிடிபட்டு எப்படித்தான் அழுது புலம்பினாலும் காப்பாற்ற யாரும் வரமாட்டார்.
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.