2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஞானசாரரின் மனுவுக்கான ஆதாரத்துக்கு திகதி குறிப்பு

Thipaan   / 2017 ஜூன் 15 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான் 

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரால், தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா என்பதற்கான ஆதாரம் திரட்ட உயர்நீதிமன்றம், நேற்று (14) தீர்மானித்தது.

இந்த மனு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர் அனில் குணரத்ன ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இம்மாதம் 22ஆம் திகதி மனுவை எடுத்துக்கொள்வதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.  

தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரியும் கைது செய்வதற்கான நகர்வுகளுக்கு எதிராகவும், இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியும், ஞானசார தேரர், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான பிரிவே, தன்னைக் கைதுசெய்வதற்கு முயல்வதாகவும் அந்தப் பிரிவு, இனவாத விரோதத்தைத் தூண்டுவது தொடர்பிலே தனது விசாரணையை ஆரம்பித்தாகவும் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல், கைதுசெய்வதற்கு அப்பிரிவு முயல்வதாகவும்  

 அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அவருடைய சட்டத்தரணியான திரந்த வலலியத்த ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் உட்பட நால்வர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.  

நாட்டைவிட்டு அவர் தப்பிச்செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .