2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கதிர்காமத்தில் வயோதிபர் மரணம்

Niroshini   / 2016 ஜூலை 12 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை:

லொறி ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹியங்கனை நீதவான் நீதிமன்றம நீதவான்,  திங்கட்கிழமை (11) உத்தரவு பிறப்பித்தார்

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து,  மஹிங்கனை - ஹோங்காஸ் சந்தியில் சந்தேகத்துக்கிடமான முறையில் திங்கட்கிழமை (11) வந்த லொறியை சோதனைக்குட்படுத்தியபோதே, சட்டவிரோதமாக 14 மாடுகள் கொண்டுவரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

மின்னேரியா:

மின்னேரியா பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார்.

பொலன்னறுவையிலிருந்து ஹபரண நோக்கிச் சென்ற  மோட்டார் சைக்கிளிலும் ஹபரணயிலிருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர்கள் ஹிங்குரொங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மின்னேரியா  பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க விஜயரத்ன என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கதிர்காமம்:

கதிர்காமம் நகரிலுள்ள முஸ்லிம் யாத்திரிகர் மண்டபத்துக்கு முன்னால், திங்கட்கிழமை(11) இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொஸ்லந்தை பகுதியைச் சேர்ந்த 72 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று சாரதியால் பின்னோக்கி நகர முற்பட்டபோது, அருகிலிருந்த வயோதிபர் மீது மோதுண்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த வயோதிபர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

தம்புள்ளை:

தம்புள்ளை வீரமொஹான் மகா வித்தியாலயத்துக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகனவிபத்தில் 2 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தம்புள்ளை வீரமொஹான் மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரிக்கடவையைக் கடக்க முற்பட்ட 2 சிறுவர்கள் மீது எதிரே வந்த கெப் ரக வாகனமொன்று மோதியுள்ளது.

இவ்விபத்தில், சிகிரியா-பெல்வெஹருவ பனுதியைச் சேர்ந்த 11, 12 வயது நிரம்பிய சிறுவர்களே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த சிறுவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொட்புடைய வாகன சாரதியை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .