2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாணயத்தாள்களை கடத்திய மூவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு நாணயத்தாள்களைக் கடத்திச்செல்ல முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இரு பெண்கள் உட்பட இலங்கையர்கள் மூவரை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகள், இன்று செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

கட்டார் விமானச் சேவைக்குச் சொந்தமான QR-69 என்ற விமானத்தின் மூலம் பயணிக்க முற்பட்ட பெண்ணொருவரின் பயணப் பொதியிலிருந்து, 160 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்த பெண்ணையும் அவருடன் வந்ததாகக் கூறப்படும் மற்றுமொரு பெண மற்றும் ஆணொருவரையும் நேற்று அதிகாலை 3.25 மணியளவில், சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

யூரோக்கள், அமெரிக்க டொலர்கள், குவைத் டினார்கள், சவூதி அரேபிய ரியால்கள் மற்றும் ஓமான் ரியால்கள் போன்ற வெளிநாட்டு நாணயத்தாள்கள், அப்பெண்ணின் பயணப் பொதியில் உள்ளடங்கி இருந்ததாகவும் இவற்றை அவர்கள், டுபாய்க்குக் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்கள அதிகரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .