2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

யாழில். பிரபலமான நிறுவனமொன்றில் 11 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா 

யாழில் அமைந்துள்ள பிரபலமான நிறுவனமொன்றில் 11 லட்சத்தி 3240 ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள இந் நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை இரவு இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தில் காணப்பட்ட பணம் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக நிறுவன முகாமையாளர் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

திருட்டு சம்பவம் தொடர்பாக எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X