2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பணக் கொடுக்கல், வாங்கல் கைகலப்பில்; கத்திக்குத்துக்குள்ளான இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் பணக் கொடுக்கல், வாங்கலினால் ஏற்பட்ட கைகலப்பினால் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சாய்ந்தமருது முதலாம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது அபூபக்கர் முஹம்மது சிராஸ் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்துக்குள்ளான இவ்விளைஞர் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் இவர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலேயே இவர் உயிரிழந்ததாக அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.

சாய்ந்தமருது முதலாம் பிரிவு சாகிரா கல்லூரி வீதியிலுள்ள இரு அயல் வீடுகளைச் சேர்ந்த இருவருக்கிடையில்   கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 400 ரூபா பணக் கொடுக்கல்,  வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டது. இதன்போது வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதால் ஒருவர் தலையில் மற்றையவர்  கத்தியால் குத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .