2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

வென்னப்புவவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

வென்னப்புவ, அங்கம்பிட்டி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ, அங்கம்பிட்டி பிரதேசத்தில் உள்ள தும்புத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ரிதீகம பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளியே (வயது 48)  இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

இருவருக்கு இடையில் நிலவிவந்த தனிப்பட்ட பிரச்சினையே இந்தக் கொலைக்கு காரணம் என்று விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .