2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி சுட்டுக்கொலை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரியும் தலைமை இன்ஸ்பெக்டருமான இந்திரசோமா ரத்நாயக்க சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம் அலப்பத்தையிலுள்ள வீட்டிலிருந்து  இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விடுமுறையில் இருந்தபோதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி, காணிப் பிரச்சினை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருவதாக தெரிவித்தார்.


  Comments - 0

  • OBAMA Sunday, 18 November 2012 07:36 AM

    இந்த அரசாங்கம் வந்த நாள் முதல் இன்று வரை எத்தனை அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் கவனம் எடுக்காதது தான் காரணம்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .