2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

செக் குடியரசுப் பிரஜை சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த செக் குடியரசுப் பிரஜை ஒருவர் ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

60 வயதான செக் குடியரசுப் பிரஜை தனது விடுமுறையை கழிப்பதற்காக கடந்த டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி  இலங்கைக்கு வந்திருந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இவரது சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இது தொடர்பான விசாரணையை ஹிக்கடுவைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .