2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மாமனாரினால் மருமகள் தீயிட்டுக் கொலை

Kanagaraj   / 2013 ஜூலை 27 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.இஸட்.ஷாஜஹான்  

மாமனாரினால் மருமகள் தீயிட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை  இடம் பெற்றுள்ளது.

கட்டுநாயக்க , குரணை, நத்தா மாவத்தையை சேர்ந்த செல்லப்புலிகே லக் சிகா சுதர்ஸனி ரோஸா என்ற  28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே கணவரின் தந்தையினால் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்று அதிகாலை   5.15 மணியளவில் குறித்த பெண் சந்தேக நபரான கணவரின் தந்தையினால் தீயிட்டு சம்பவத்தை அடுத்து எரிகாயங்களுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இன்று பிற்பகல் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில்; மரணமடைந்த பெண்ணின் மாமனாரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, மருமகளுக்கு தானே தீ மூட்டியதாக  சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று பிற்பகல் நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ் வீரதுங்க விஜயம் செய்து விசாரண நடத்தினார்.

இச்சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  ஆறாம் திகதி நடைபெறும் எனவும் அன்றைய தினம் சாட்சிகளை மன்றில் ஆஜர் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பிராந்திய உப பொலிஸ் அத்தியட்சகர் பி. ஏ.டி. விஜயரத்னவின் ஆலோசனையின் போரில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--