2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த பெண் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் கொள்ளையிட்டு வந்ததாகக் கூறப்படும் கொள்ளைக் கும்பலொன்றைச் சேர்ந்த பெண்ணொருவரை  இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தென்பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படும் இக்கொள்ளைக் கும்பல்,  மட்டக்களப்பு நகரம் உட்பட பல இடங்களில் முச்சக்கரவண்டியின் உதவியுடன் கொள்ளையிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கொள்ளைக் கும்பல் இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நகரிலுள்ள பாதணிக் கடையொன்றில் கையடக்கத் தொலைபேசியொன்றை கொள்ளையிட்டுக் கொண்டு  முச்சக்கரவண்டியில் தப்பியோடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இக்கொள்ளைக் கும்பலை பொலிஸாரும்  இளைஞர்கள் சிலரும் துரத்திச்சென்று பாலமீன்மடு பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் இக்கொள்ளைக் கும்பலை மடக்கிப்பிடித்தபோது பெண்ணொருவர் பிடிபட்ட நிலையில், ஏனைய மூவரும் தப்பியோடியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வர்த்தக நிலையங்களில் கொள்ளையிடப்பட்ட பெருமளவான பாதணிகள், மின்சார வயர்கள், ஆடைகள், நைலோன் கயிறுகள் உள்ளிட்ட பொருட்களை முச்சக்கரவண்டியுடன் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X