2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பொலிஸாரெனக் கூறி கொள்ளையிட முனைந்தவர்கள் கைது

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
 
தம்புள்ளை நகர சபையின் உறுப்பினர் தினேஷ் ராஜபக்ஷவின் வீட்டை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொள்ளையிட வந்ததாகக் கூறப்படும் எட்டு சந்தேகநபர்களை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
இவர்கள் தாம் மிரிஹான பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் என தெரிவித்துக் கொண்டு வீட்டை திறக்குமாறு கோரி உள்ளனர்.
 
இது சம்பந்தமாக சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக, நகர சபை உறுப்பினர் அதற்கு இணங்காது அயலவர்களுக்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.
 
அதன் பின்னர் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்று கொண்டிருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று தம்புள்ளை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் ஒன்பதாம் திகதிவரை விளக்க மறியளில் வைக்குமாறு தம்புள்ளை மேலதிக நீதவான் ஜயம்பதி ஏக்கநாயகக் உத்தரவிட்டார்.
 
சந்தேகநபர்கள் குருணாகல், மாத்தளை, கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .