2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, புன்னை நீராவியடிப் பகுதியில் ஆள் நடமாட்டம் அற்ற காணியொன்றிலிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை (13) மீட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குள்ள மரமொன்றின் கீழ் இரத்தக்கறையைக்  கண்ட பொதுமக்கள்  பொலிஸாருக்கு  தகவல் வழங்கினர்.

இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார், மரமுள்ள இடத்திலிருந்து  அங்கிருக்கும்  கிணற்றடிவரை இரத்தக்கறை காணப்படுவதையும்  ஒருவரை இழுத்துச் சென்ற அடையாளம் காணப்படுவதையும் அவதானித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிணற்றில் பார்த்தபோது, கல்லுடன் கட்டியவாறு நிர்வாணமான நிலையில் பெண்ணொருவரின் சடலம் காணப்பட்டது. 

சடலத்தை பார்வையிட்ட  கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.விஜயராணி,  பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--