2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

அரையிறுதியில் பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2020 ஜனவரி 09 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு தொழில்முறை கால்பந்தாட்ட லீக்கால் நடாத்தப்படும் விலகல் முறையிலான பிரெஞ்சு லீக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றுள்ளது.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற சென். எட்டியனேயுடனான காலிறுதிப் போட்டியில் வென்றதன் மூலமே அரையிறுதிப் போட்டிக்குக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றிருந்தது.

இப்போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே கோலைப் பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் மெளரோ இகார்டி, தனணிக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்து போட்டியின் 39ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைனின் இன்னொரு முன்களவீரரான நெய்மர், தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

இந்நிலையில், முதற்பாதிக்கு முன்பதாக கிடைத்த ஓவ்ண் கோலொன்று காரணமாக முதற்பாதி முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலையில் இருந்தது.

இதேவேளை, இரண்டாவது பாதியின் நான்காவது நிமிடத்தில் மேலுமொரு கோலைப் பெற்ற மெளரோ இகார்டி பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னிலையை 4-0 என்ற கோல் கணக்கில் உயர்த்தியதுடன், அடுத்த எட்டாவது நிமிடத்தில் இன்னொரு கோலைப் பெற்று தனது ஹட்-ட்ரிக்கை பூர்த்தி செய்து 5-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், அடுத்த 10ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைனின் இன்னொரு முன்களவீரரான கிலியான் மப்பே, 6-0 என்ற கோல் கணக்கில் தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இதேவேளை, அடுத்த நான்காவது நிமிடத்தில் சென். எட்டியனேயின் மத்தியகளவீரர் யொஹான் கபயே ஆறுதல் கோலொன்றைப் பெற்ற நிலையில், இறுதியில் 6-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .