Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் கிரிக்கட் அணியானது, அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு இன்று (04) சென்றிருந்தனர்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றிரவு மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் உப அதிபர் ரஞ்சித் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவுஸ்திரேலியா செல்லவுள்ள அணியினர் அனைவரும் பங்குபற்றினர்.
40 ஓவர்களைக் கொண்ட இரண்டு போட்டிகளும், 20 ஓவர்களைக் கொண்ட ஒரு போட்டியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இடம்பெறவுள்ளதாகவும், அவுஸ்திரேலியாவில் உள்ள மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் கிரிக்கெட் அணியினருடன் இரண்டு போட்டிகளும், அங்கு பிரசித்தம் பெற்ற யூ .டி.எஸ்.சி அணியினருடன் 40 ஓவர்களைக் கொண்ட ஒரு போட்டியிலும் பங்குபற்றவுள்ளதாகவும், போட்டிகள் எதிர்வரும் நாளை மறுதினம், மறுநாள் மற்றும் இம்மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும், யூ.டி.எஸ்.சி அணியானது பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை வீரர்களைக் கொண்ட அணி எனவும் அணியின் தலைவர் விராஜ் ஜயசுமன தெரிவித்தார்.
இந்நிகழ்வில் போட்டிகளின் போது அணியும் உத்தியோகபூர்வ சீருடைகள் ஊடகங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
19 Apr 2021
19 Apr 2021