2021 ஏப்ரல் 17, சனிக்கிழமை

ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: 3ஆம் சுற்றில் முதல்நிலை வீரர்

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு, உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் தகுதிபெற்றுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் இக்னாசியோ லொன்டெரோவை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-4, 7-6 (7-3), 6-1 என்ற நேர் செட்களில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவின் டமிர் ஜொர்முர்ரை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 3-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் பிராட்லி கிளானை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி, 6-2, 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில். இன்று அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் லோரன் டேவிஸை எதிர்கொண்ட உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் நிக்கொல் கிப்ஸை எதிர்கொண்ட உலகின் நான்காம்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம்நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் சக ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான கட்டி மக்னல்லியை எதிர்கொண்ட உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் சீனாவின் ஸு லின்னை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸ், 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .