Editorial / 2019 நவம்பர் 19 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலின் டெல் அவிவ்வில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆர்ஜென்டீனா, உருகுவே அணிகளுக்கிடையான சர்வதேச சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
சக முன்களவீரர் லூயிஸ் சுவாரஸ், மத்தியகளவீரர் லூகாஸ் டொரெய்ராவால் ஆரம்பிக்கப்பட்ட நகர்வை போட்டியின் 34ஆவது நிமிடத்தில் உருகுவேயின் முன்களவீரர் எடின்சன் கவானி கோலாக்கிய நிலையில் உருகுவே முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில், ஆர்ஜென்டீனாவின் நட்சத்திர முன்களவீரர் லியனல் மெஸ்ஸியின் பிறீ கிக்கொன்றை போட்டியின் 63ஆவது நிமிடத்தில் அவரின் சக முன்களவீரர் சேர்ஜியோ அகுரோ கோலாக்கிய நிலையில் கோலெண்ணிக்கையை ஆர்ஜென்டீனா சமப்படுத்தியது.
எவ்வாறெனினும், அடுத்த ஆறாவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 20 மீற்றர் தூரத்திலிருந்து பிறீ கிக்கொன்றின் மூலம் கோலொன்றைப் பெற்ற லூயிஸ் சுவாரஸ், உருகுவேக்கு மீண்டும் முன்னிலையை வழங்கினார்.
இந்நிலையில், போட்டியின் இறுதி நிமிடங்களில் கிடைக்கப் பெற்ற பெனால்டியொன்றை லியனல் மெஸ்ஸி கோலாக்க 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
5 minute ago
42 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
42 minute ago
45 minute ago