2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சிற்றியை வென்றது யுனைட்டெட்

Editorial   / 2020 மார்ச் 09 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரர் ப்ரூனே பெர்ணான்டஸ் செலுத்திய பிறீ கிக்கை அவரின் சக முன்களவீரர் அன்டோனி மார்ஷியல் போட்டியின் 30ஆவது நிமிடத்தில் கோலாக்க மன்செஸ்டர் யுனைட்டெட் முன்னிலை பெற்றது.

பின்னர் போட்டியின் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் சக முன்களவீரர் ரஹீம் ஸ்டேர்லிங்கிடமிருந்து பெற்ற பந்தை மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான சேர்ஜியோ அகுரோ கோல் கம்பத்துக்குள் செலுத்தியபோதும் அவர் ஓஃப் சைட்டில் காணப்பட்டிருந்தார்.

இந்நிலையில், போட்டியின் இறுதி நிமிடங்களில் மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சனால் உருட்டப்பட்ட பந்தானது மாற்றுவீரராகக் களமிறங்கிய மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரரான ஸ்கொட் மக்டொமினியிடம் செல்ல அவர் அதைக் கோலாக்கியதோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக, மேஸன் மெளன்ட், பெட்ரோ, வில்லியன், ஒலிவர் ஜிரூட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X