2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுயதொழில் வாய்ப்பினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: அமைச்சர் றிஷாட்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு விதவைகளாகவும் தனித்தும் கஷ்டப்படுகின்ற வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை வழங்குவதன் மூலம் அவர்களின் முன்னேற்றகரமான வாழ்வுக்கு வழியினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன், தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

மீள்குடியேற்றப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளீர்கள் என்று கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கைத்தொழில் அபிவிருத்தி, மீள்குடியேற்றப்பட்ட மக்களின் இன்றைய நிலை, யாழிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் தற்போதைய பிரச்சினைகள் போன்ற பலவிடயங்கள் பற்றி தமிழ்மிரரின் நேர்காணல் பகுதியில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார். அவரின் முழுமையான செவ்வியினை காணொளியில் காணலாம்...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .