இன்றைய பலன்கள் (23.08.2011)

 

இன்றைய பலன்கள் (23.08.2011)

இன்று கர வருடம் ஆவணி மாதம் 06ஆம் நாள் (23.08.2011) செவ்வாய்க்கிழமை. அமிர்த மேல் சித்த யோகமும் நவமி திதியும் ரோகிணி நட்சத்திரம் காலை 02.01 மணிவரை பின்பு மிருகசீரிடம்.
இராகு காலம் : காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை
எமகண்டம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை, இரவு 01.30 மணி முதல் 03.00 மணிவரை.
நல்ல நேரம் : காலை 10.45 மணி முதல் 11.45 மணிவரை, மாலை 04.45 மணி முதல் 05.45 மணிவரை.


மேடம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, வியாபாரத்தில் புதிய முயற்சிகள் தடைப்படும், கோபத்தில் பேசும் வார்த்தைகள் சங்கடத்தை தரும்.
அஸ்வினி: கவனம்
பரணி: தோல்வி
கிருத்திகை 1ஆம் பாதம்: நாவடக்கம்


இடபம்
பெரியோர்களின் அறிவுரைகள் நல்வழியை ஏற்படுத்தும், பணவரவு கிடைக்கும், மனதில் பயம் உணர்வுகள் தோன்றும்.
கிருத்திகை 2, 3, 4: கலக்கம்
ரோகிணி: லாபம்
மிருகசீரிடம் 1, 2: நம்பிக்கை


மிதுனம்
தீயவர்களின் சகவாசங்கள் சிக்கலை ஏற்படுத்தும், மன உளைச்சல்கள் ஏற்படும், தேவையற்ற பேச்சுக்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும்.
மிருகசீரிடம் 2, 3: பகை
திருவாதிரை: சங்கடம்
புனர்பூசம்: வாக்குவாதம்


கடகம்
குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்யோன்யம் பலப்படும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
புனர்பூசம்: சுபம்
பூசம்: குடும்ப மகிழ்ச்சி
ஆயில்யம்: தகவல்


சிம்மம்
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும், அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும்.
மகம்: பின்னடைவு
பூரம்: நலன் பாதிப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: விருப்பமின்மை


கன்னி
பணம் சம்பாதிப்பதில் அக்கறை செலுத்தவும், மனதால் அலைச்சல்கள் ஏற்படும், அயல் தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: நல்ல செய்திகள்
அஸ்தம்: விடா முயற்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: சஞ்சலம்


துலாம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், குழப்பங்கள் வந்து நீங்கும், தேவையற்ற பேச்சுவார்த்தைகள் மனசங்கடத்துக்கு வழிவகுக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பொறுமை
சுவாதி: செலவு
விசாகம் 1, 2, 3: பகை


விருட்சிகம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், திறமையான வேலைத் திட்டங்களை செயல்படுத்தல், அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் 4: வெற்றி
அனுசம்: அனுசரிப்பு
கேட்டை: நட்பு


தனுசு
வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படும், பகைவர்களினால் பிரச்சினைகள் ஏற்படும், புதிய காரியங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
மூலம்: மனஸ்தாபம்
பூராடம்: குழப்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: போட்டி


மகரம்
ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், புதிய செய்திகள் வந்து சேரும்.
உத்திராடம் 2, 3, 4: சுகயீனம்
திருவோணம்: நற்செய்தி
அவிட்டம் 1, 2: உதவி


கும்பம்
கடின வாக்குவாதங்கள் பகையை ஏற்படுத்தும், திருடர்களிடம் கவனம் தேவை, அனாவசிய செலவுகளை தவிர்க்கவும்.
அவிட்டம் 3, 4: பயம்
சதயம்: நாவடக்கம்
பூரட்டாதி 1, 2, 3: விரயம்


மீனம்
ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும், நெருங்கிய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம்.
பூரட்டாதி 4: ஆகாரம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: வெற்றி


இன்றைய பலன்கள் (23.08.2011)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.