2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவன சுகந்தனுடன் ஒரு நேர்காணல்

A.P.Mathan   / 2013 மார்ச் 01 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் வட மாகாணத்தை பொறுத்தமட்டில் சுமார் 3 தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தக சூழ்நிலை நிறைவடைந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அப்பகுதியில் பல நிதிசார் நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன. வங்கிகளைபோன்று காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் இதர நிதிசார் நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன. பொதுவாக இலங்கையின் வடபகுதியை சேர்ந்த மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கம் அதிகமாக காணப்படுகிறது எனும் நம்பிக்கையை இந்த நிதி நிறுவனங்கள் கொண்டுள்ளமையை எம்மால் பொதுவாக அவதானிக்க முடிந்திருந்தது.

இவ்வாறு கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி முதல் சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனம் தனது வடபகுதி கிளையை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் ஆரம்பித்திருந்தது. இந்த கிளையின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தருமதுரை சுகந்தன் அவர்களிடம் சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளையின் செயற்பாடுகள் மற்றும் தற்போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் பொருளாதார நிலைகள் குறித்து தமிழ்மிரரின் உழைப்பாளிகள் பகுதி மேற்கொண்ட நேர்காணலின் விபரம் இங்கே வழங்கப்படுகிறது.

வடபகுதி மக்களை பொறுத்தமட்டில் சேமிப்பு பழக்கம் என்பதும் மிகவும் உயர்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. நகர பகுதிகளை அண்டிய மக்கள் பெருமளவில் வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதை அவதானிக்க முடியும். ஆயினும் கிராமிய மட்டங்களில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு முறைகள், சேமிப்பு முறைகள் குறித்து எமது வியாபார மேம்படுத்தல் குழுவினர் அவர்களின் பகுதிகளுக்கு விஜயம் செய்து விளக்கங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் எமது வர்த்தக நடவடிக்கைகளை நாம் பிரபல்யமடையச் செய்வதுடன், மக்கள் மத்தியில் எமது சேவைகளை அவர்களின் வாசலுக்கே கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பெரும்பாலும் வட பகுதி மக்களை பொறுத்தமட்டில் அவர்களின் முதல் தர முதலீட்டு தெரிவாக காணிகள் மற்றும் சொத்துகளில் முதலீடு செய்வதில் இந்த காலத்தில் அதிகளவு அக்கறை செலுத்துகின்றனர். இதனை தொடர்ந்து தங்க நகைகள் மற்றும் நிலையான வைப்பு போன்றவற்றிலும் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் செலுத்துகின்றனர். சிலருக்கு தமக்கென வியாபாரம் ஒன்றை ஆரம்பித்து அதில் முதலீடுகளை மேற்கொள்ளும் ஆர்வமும் காணப்படுகிறது.


நாம் எமது சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் மூலம் வட பகுதி மக்களுக்கு சேமிப்பு, நிலையான வைப்பு, அடகுச் சேவை மற்றும் லீசிங் வசதிகளை வழங்கி வருகிறோம். வாடிக்கையாளர்கள் எம்மைத்தேடி வரும் வரை காத்திருக்காமல், நாம் வாடிக்கையாளர்களை நாடிச் சென்று அவர்களுக்கு எமது சேவைகளை வழங்கி வருகிறோம். இவ்வாறு செல்லும் எமது அதிகாரிகளிடம் தம்மை எமது நிறுவனத்தின் ஊழியர் என்பதை இனங்காட்டிக் கொள்ளும் வகையில் முறையான ஆவணங்கள் அனைத்தையும் கொண்டிருப்பார்கள். இவ்வாறு அவர்களிடமிருந்து ஒரு சேவையை பெற்றுக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர் முதல் சம்பந்தப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து எமது அதிகாரியிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், மறுதினம் அவருக்கான நிதித் தேவை பூர்த்தி செய்யப்படும். இவர்களுக்குரிய வைப்பு உறுதி செய்யும் சான்றிதழ்கள் மற்றும் கணக்கு புத்தகங்கள் என்பன இவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுவதுடன், அவர்களுக்குரிய அன்பளிப்புகளும் இதன்போது வழங்கப்படுகிறது. எமது கிளையில் தற்போது 18 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் வெளிக்கள வர்த்தக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

வட பகுதியை பொறுத்தமட்டில் அதிகளவு மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள், விவசாயத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசாங்க தொழில் நிலையில் உள்ளவர்கள் என பல தரப்பட்ட வருமானமீட்டும் பிரிவினர் காணப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரின் நிதிசார் தேவைகைளையும் நிவர்த்தி செய்யும் வகையில் எமது சேவைகள் அமைந்துள்ளன.

10,000 ரூபாவை ஆகக்குறைந்தது ஒரு மாத காலத்துக்கு நிலையான வைப்பிலிடும் பட்சத்தில் அந்நபர் அன்பளிப்பொன்றை பெறக்கூடிய தகுதியை பெறுவார். இதுபோன்று சேமிப்பு கணக்குகளுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன. கால எல்லை மற்றும் பணப்பெறுமதி போன்றவற்றை பொறுத்து இந்த அன்பளிப்பு வகைகள் வேறுபடுவதுடன், வட்டி வீதங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனம் இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்தை பெற்ற ஒரு நிதிசார் நிறுவனம். இதன் காரணமாக எமது நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து வாடிக்கையாளர்கள் எவ்விதமான மாற்று யோசனைகளையும் கொள்ளத் தேவையில்லை.


வடபகுதியில் வெகுவிரைவில் எமது மற்றுமொரு சேவை நிலையத்தை கிளிநொச்சியில் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை எமது தலைமையகம் மேற்கொண்ட வண்ணமுள்ளது. எமது நிறுவனத்தின் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை குலுக்கல் முறையிலான அதிர்ஷ்டசாலிகள் தெரிவு இடம்பெறுகிறது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு பல பெறுமதியான பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒரு வாடிக்கையாளர் முதலீடு செய்யும் ஒவ்வொரு 10,000 ரூபாவுக்கும் இந்த போட்டியில் பங்குபற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர், தற்போது வட பகுதியை பொறுத்தமட்டில் அனுகூலமான சூழ்நிலை காணப்படுகிறது. தற்போது யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் சகல நிதிசார் நிறுவனங்களும் தமது கிளைகளை கொண்டுள்ளன. ஆயினும் மக்கள் மத்தியில் இவற்றில் எத்தனை சென்றடைகின்றன என்பது ஒரு புதிராகவே உள்ளது. தமது நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த சில நிறுவனங்கள் தவறியுள்ளன. வெறுமனே யாழ்ப்பாணத்தில் ஒரு கிளையை நிறுவினால் போதும், மக்கள் வந்து தமது வைப்புகளையும், கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்வார்கள் என சில நிறுவனங்கள் கருதுகின்றன போலும். நாம் ஒவ்வொரு பகுதியாக தெரிவு செய்து எமது வர்த்தக நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். ஆயினும் மக்கள் மத்தியில் நிதிசார் நிறுவனங்களுக்கு வரவேற்பு காணப்படுகிறது.

அபிவிருத்தி நடவடிக்கைகளை பொறுத்தமட்டில் சிறப்பான முறையில் இடம்பெறுகிறது என குறிப்பிடலாம். முன்னொரு காலத்தில் பாழடைந்த காணிகளாக காணப்பட்ட இடங்களில் கூட தற்போது பெரிய கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. மக்கள் தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களின் போக்குவரத்து தேவைக்கு அவசியமான ஒரு வாகனத்தை கொள்வனவு செய்து கொள்வதற்கான லீசிங் போன்ற வசதிகளை நாம் வழங்கி வருகிறோம்.

சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு நாடளாவிய ரீதியில் மொத்தமாக 43 கிளைகள் காணப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் எமது கிளையின் மூலமாக மொத்தம் 100 மில்லியன் ரூபா வாடிக்கையாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், 60 மில்லியன் ரூபா வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புகளாக பெறப்பட்டுள்ளன. பண மீட்பு நடவடிக்கைகளை பொறுத்தமட்டில் மாதமொன்றுக்கு 95 வீதம் சராசரியாக அமைந்துள்ளது. இதற்கென நாம் பிரத்தியேக அதிகாரி ஒருவரை கடமையில் அமர்த்தியுள்ளோம். எமது கிளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். அதுபோல மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளிலும் காலை 8.30 முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்திருக்கும்.

எமது வருடாந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த காலங்களில் நாம் வெவ்வேறு சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். முதல் ஆண்டு நிறைவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சலவை இயந்திரமொன்றை அன்பளிப்பாக கையளித்திருந்தோம். கடந்த ஆண்டில் கைதடி மாற்றுத்திறன் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அன்பளிப்பு செய்து அவர்களுடன் மகிழ்ச்சிகரமாக ஒருநாள் பொழுதை களித்திருந்தோம்.

2010 – 2011 ஆண்டுக்கான சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் வருடாந்த விருதுகள் வழங்கல் நிகழ்வில், யாழ்ப்பாண கிளைக்கு சிறந்த உயர்ச்சி மற்றும் முன்வருகைக்கான மெரிட் விருது வழங்கப்பட்டிருந்தது.

எமது சேவைகளை பற்றி மேலும் தெரிவிப்பதாயின், எமது சேமிப்பு கணக்குகளுக்கு VISA ATM அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையை பயன்படுத்தி எந்தவொரு கொமர்ஷல் வங்கியின் ATM இயந்திரத்தின் மூலமாகவும் பணத்தை மீளப்பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக எமது நிறுவனம் எந்த கட்டணத்தையும் அறவிடாது.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கென விசேடமாக அமைந்த சிடிபி செல்லமே கணக்கு அமைந்துள்ளது. இதுபோல சிடிபி றியல் சேவர் கணக்கு வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கென வழங்கப்படுகிறது. இந்த கணக்கின் மூலம் ஒவ்வொரு சேமிப்புக்கும் 10 வீத வட்டி வழங்கப்படுகிறது. அதுபோல சிடிபி சேவர் கணக்கின் மூலம் 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிலையான வைப்புகளுக்கும் சீட்டிழுப்பின்றி உயர்தொழில்நுட்பம் வாய்ந்த ஸ்மார்ட் போன்கள், டிஜிட்டல் கமரா, LCD தொலைக்காட்சிகள் போன்றன வழங்கப்படுகின்றன.

மேலும் திருப்பதி தரிசனம் எனும் நிலையான வைப்பு கணக்கும் சிடிபி மூலம் வழங்கப்படுகிறது. அருள் மழை அள்ளிப்பொழியும் திருப்பதிக்கு சென்று தரிசனம் மேற்கொள்ள விரும்புவோர் செய்ய வேண்டியது, 250,000 ரூபாவை திருப்பதி தரிசன கணக்கில் 3 ஆண்டுகளுக்கு நிலையான வைப்பிலிட்டு, 11.50 வீதம் வரையிலான வட்டியை பெற்றுக் கொள்வதாகும். 2 இரவுகள் மற்றும் 3 பகல் பொழுதுகளுடன், சென்னையில் விசேட கடைத்தெரு பயண ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

நிலையான வைப்புக்கு காப்புறுதியை வழங்கும் இலங்கையின் முதலாவது கணக்காக சிடிபி சுகதனம் அமைந்துள்ளது. 100,000 ரூபா பெறுமதியான நிலையான வைப்புக்கு (இரண்டு வருடங்களுக்கு) 100,000 ரூபா பெறுமதியான இலவச மருத்துவ காப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் (ஒரு வருடத்துக்கு 50,000 ரூபா வீதம்) என்றார்.

நேர்காணல்: ச.சேகர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .