2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையர்கள் தங்கத்தில் முதலீடுகளை மேற்கொள்வது குறைவாக காணப்படுகிறது: தினேஷ் குமார்

A.P.Mathan   / 2013 நவம்பர் 04 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.சேகர்
 
இலங்கையை பொறுத்தமட்டில் தங்கத்தில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாக காணப்படுகிறது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தில் முதலீடுகளை மேற்கொள்வோர் மிகவும் குறைந்த சதவீதமாகவே காணப்படுகின்றனர். எனவே இலங்கையர் தங்கத்தில் முதலீடுகளை மேற்கொள்வது மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது என வெள்ளவத்தை சுவர்ணா கோல்ட் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ஸ்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சண்முகம் தினேஷ் குமார் - தமிழ் மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
 
இலங்கையில் தமது நிறுவனத்தின் செயற்பாடு, தங்கத்தின் விலை நிலைவரம், வாடிக்கையாளர் சேவை குறித்து சண்முகம் தினேஷ் குமார் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 
 
'வெள்ளவத்தையில் 1987ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சுவர்ணா கோல்ட் ஹவுஸ் நிறுவப்பட்டது. எனது தந்தை பி.சண்முகம் அவர்களால், ஆரம்பத்தில் 5 பேருடன் இந்த விற்பனையகம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் எமக்கென பிரத்தியேகமாக நகை தயாரிக்கும் பகுதியொன்று காணப்படவில்லை. தற்போது 15 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எமக்கென பிரத்தியேகமான நகை தயாரிக்கும் பகுதியும் காணப்படுகிறது. 2012ஆம் ஆண்டில் சுவர்ணா கோல்ட் ஹவுஸ் பிரைவேற் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. எமது விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாக இந்த பெயர் மாற்றமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது'. 
 
'எமது நிறுவனம் நிறுவப்பட்டது முதல் நாம் தங்கத்தின் தரம் குறித்து அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். எம்மைப்பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தங்கத்தை தரம் குறையாமல் வழங்க வேண்டும் என்பதே முதல் நோக்கம். சந்தையில் ஏராளமான ஆபரண விற்பனையகங்கள் காணப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. தரமான நகைகளை வழங்க வேண்டும் எனும் எமது நோக்கத்தை உறுதி செய்து கொள்ளும் வகையில் நாம் எம்மிடம் நவீன சாதனங்களை கொண்டுள்ளோம்'.
 
'இந்த வர்த்தகத்தில் நான் 2001ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறேன். 2009ஆம் ஆண்டில் நிறுவனத்தின் செயற்பாடுகளை தகப்பனாரிடமிருந்து பொறுப்பேற்றேன். 2008ஆம் ஆண்டில் நாம் தங்கத்தின் தரத்தை உறுதி செய்து கொள்வதற்காக XRF (X-ray fluorescence) எனும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தோம். இதன் மூலம் தங்கத்தின் தரம் 98 வீதம் வரை மிகச்சரியாக பரிசோதித்து உறுதி செய்து கொள்ள முடியும். முன்னர் தங்கத்தின் கெரட் அளவை பரிசோதித்து உறுதி செய்து கொள்வதற்காக இலங்கை மாணிக்கக்கல் கூட்டுத்தாபனத்துக்கு நகையை அனுப்பி அவர்களின் உறுதிப்படுத்திய சான்றை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. இதற்காக 3 நாட்கள் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் காணப்பட்டது. ஆயினும் இந்த புதிய இயந்திரம் அறிமுகத்தின் பின்னர், வாடிக்கையாளர்கள் உடனுக்குடன் தமது நகைகளை கொள்வனவு செய்து கொள்ளக்கூடிய வசதி காணப்படுகிறது'. 

 
'இலங்கையில் தங்கத்தின் தரம் குறித்து அறிந்து கொள்வதில் புதிய புரட்சியை நாம் ஏற்படுத்தியிருந்தோம். அதாவது முதல் தடவையாக இலங்கையில் வாடிக்கையாளர் கொள்வனவு செய்யும் நகைகளுக்கு உத்தரவாத அட்டை (Promise card) என்பதை நாம் அறிமுகம் செய்திருந்தோம். இது உள்நாட்டு வாடிக்கையாளர்களை போன்று, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் பெருமளவு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர் கொள்வனவு செய்யும் நகையின் படத்துடன், உற்பத்தி செய்த திகதி, கெரட் அளவு போன்ற சகல விதமான விபரங்களையும் உள்ளடக்கியதாக இந்த அட்டை அமைந்துள்ளது. தற்போது பார்கோட் (Bar code) கட்டமைப்பும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளதால், தங்கத்தை மீள விற்பனை செய்யும் போது உயர்ந்த பெறுமதியை பெற்றுக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது'.
 
'சாதாரணமாக தரத்தில் உயர்ந்த எந்தவொரு பொருளும், விலையிலும் உயர்ந்து காணப்படும். இது பொதுவான விடயம். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான இலங்கையர் விலை குறித்தே அதிகளவு கவனத்தை செலுத்துகின்றனர். இதனால் பல வாடிக்கையாளர்கள் குறைந்த விலையை செலுத்தி குறைந்த தரத்திலான தங்கதையே கொள்வனவு செய்கின்றனர்'.
 
'இந்தியாவையும், இலங்கையையும் பொறுத்தமட்டில் தங்கத்தில் முதலீடு செய்வதில் பாரியளவு வேறுபாடு காணப்படுகிறது. இலங்கையில் தங்கத்தில் முதலீடு செய்வோர் குறைந்தளவில் காணப்படுகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வது என்பது மிகவும் பயனுள்ள விடையமாகும், அவசர நிலைகளின் போது பணத்தேவை ஏற்படுமாயின், தங்கத்தைக் கொண்டு பணத்தை திரட்டிக் கொள்ள முடியும். எனவே இந்தியாவில் காணப்படுவதை போல, இலங்கையிலும் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் அதிகரிக்குமானால், அது வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கும். மேலும், இந்தியாவை போல அல்லாமல், மக்கள் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டும், உற்றார், நண்பர்களின் பரிந்துரைகளுக்கு செவிமடுத்தும் தங்க கொள்வனவில் ஈடுபடுகின்றனர்'.

 
'தற்போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவடைந்து காணப்படுகிறது. இது உயர்வடைவதற்கான சாத்தியம் உண்டு. உலக நாடுகள் தங்கத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது, தங்கத்துக்கான கேள்வி அதிகரிப்பதால் விலையும் அதிகரிக்கும், குறித்த நாடுகள் தமது ஒதுக்கத்திலுள்ள தங்கத்தை விற்பனை செய்வதன் காரணமாக விலை சரிவடையும். இவ்வாறான ஒரு சூழ்நிலை தான் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் ஏற்பட்டது. தற்போது தங்கத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த விலை குறைவு தொடர்பாக வாடிக்கையாளர்கள் பயந்து காணப்படுகின்றனர். அவர்கள் சேமிப்பு பற்றி அதிகளவில் சிந்திக்க வேண்டும்'.
 
'நாம் தங்கத்தை கொள்வனவு செய்யக்கூடிய சகல நிலையிலுள்ள வாடிக்கையாளர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கென மூன்றுவிதமான விசேட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். வருடாந்தம் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் வகையில் நாம் வெவ்வேறு விசேட திட்டங்களை அறிமுகம் செய்வதுண்டு. இந்த ஆண்டு நாம் எமது நிறுவனத்தின் 25ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பெப்ரவரி மாதத்தில் செய்கூலி அறவிடாமல் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தோம். அக்ஷய திருதியையை முன்னிட்டு விசேட சலுகை திட்டத்தை முன்னெடுத்திருந்தோம். அதுபோல ஓகஸ்ட் மாதத்தில் பழைய நகைகளுக்கு புதிய நகைகளை கொள்வனவு செய்யும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தோம். உலக சிக்கன தினத்தை முன்னிட்டு மற்றுமொரு புதிய சலுகைத்திட்டத்தை நாம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளோம். நாளை வாடிக்கையாளர்கள் வாங்க எதிர்பார்க்கும் நகையை இனறு சந்தையில் நிலவும் விலைக்கு முற்பதிவு செய்து கொண்டு, சலுகை காலப்பகுதியினுள் உங்கள் மனதுக்கு விருப்பமான தெரிவில், அவசியமான நகைகளை வாங்கிக்கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். தெரிவு செய்து கொள்ளக்கூடிய மூன்று விதங்களில் இந்த திட்டம் அமைந்துள்ளது.'

 
'முதலாவது திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த டிசைனையும், தேவையான தங்கத்தின் எடையையும் நவம்பர் 30ஆம் திகதி வரையிலான குறித்த எந்தவொரு தினத்திலும் நிலவும் தங்கத்தின் விலைக்கு முற்கூட்டியே பதிவு செய்து, 2014 பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரையுள்ள சலுகைக் காலத்தினுள் வாங்கலாம். இரண்டாவது திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தமக்கு பிடித்த டிசைனை தெரிவு செய்ய முடியவில்லையென்றால், வாங்க எதிர்பார்க்கும் தங்கத்தின் எடையை நவம்பர் 30ஆம் திகதி வரையிலான குறித்த எந்தவொரு தினத்திலும் நிலவும் விலைக்கமைய முற்பதிவு செய்து, பின்னர் 2014 பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரையுள்ள சலுகைக்காலத்தினுள் தங்களுக்கு பிடித்த டிசைனை தெரிவு செய்யலாம். மூன்றாவது திட்டத்துக்கு அமைவாக, எந்த டிசைனில் எந்த நகையை வாங்குவது என்பது குறித்து தீர்மானிக்காவிடில், நவம்பர் 30ஆம் திகதி வரை தேவையான தங்கத்தின் எடைக்கு முற்பணத்தை மட்டும் செலுத்தி ஒதுக்கிக் கொண்டு, பின்னர் 2014 பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரையுள்ள சலுகைக்கால பகுதியினுள் விரும்பிய டிசைனில், தேவையான நகையை செய்து கொள்ளலாம். (டிசைன் மற்றும் நகை குறித்து அறிவிக்கும் தினத்தில் நிலவும் தங்கத்தின் விலையே அறவிடப்படும்). இவை அனைத்தும் நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்படும். இந்த திட்டங்கள் குறித்த மேலதிக விபரங்களை வெள்ளவத்தை சுவர்ணா கோல்ட் ஹவுஸ் பிரைவேற் லிமிடெட் காட்சியறைக்கு விஜயம் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.
 
தங்க நகைகள் கொள்வனவு செய்வது தொடர்பாக உங்கள் அனைத்துவிதமான தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் வெள்ளவத்தை சுவர்ணா கோல்ட் ஹவுஸ் பிரைவேற் லிமிடெட் இயங்கி வருகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .