2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 05.11.2018 - 09.11.2018

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

05.11.2018  

லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, டயலொக் அக்ஸியாடா மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 4.1 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, டீஜே லங்கா மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

06.11.2018 

தீபாவளிப் பண்டிகை பொது, வங்கி விடுமுறை காரணமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.  

07.11.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.3 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேசிய அபிவிருத்தி வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டீஜே லங்கா, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.  

08.11.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், காசன் கம்பர்பெட்ச் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.0 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் த்ரீ ஏக்கர் ஃபாம்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு வலிபெல் ஃபினான்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

09.11.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.2 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மெல்ஸ்டாகோர்ப் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. மேலும், வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

வாரத்தில், அ.ப.வி.சு 1.86% சரிவையும் S&P SL20 3.56% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 1.95 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .