2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 08.01.2018 - 12.01.2018

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

08.01.2018  
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நெஸ்லே லங்கா மற்றும் லயன் பிரெவரி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.7 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. சந்திப்புகள் கொமர்ஷல் வங்கி, சிலோன் டீ புரோக்கர்ஸ், மெல்ஸ்டாகோர்ப், சம்பத் வங்கி, பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி (வாக்குரிமை மற்றும் வாக்குரிமையற்ற பங்குகள்) மற்றும் ஏசிஎல் கேபிள்ஸ் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு கொமர்ஷல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு டோக்கியோ வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகம் ஈடுபட்டனர்.  

09.01.2018  

ஸ்ரீ லங்கா ரெலிகொம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 546 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சொவ்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் டோக்கியோ சீமெந்து வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

10.01.2018  

சிலோன் டொபாக்கோ கம்பனி, டயலொக் அக்ஸியாடா மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 376 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் பான் ஏசியன் பவர் மீது பதிவாகியிருந்தது. 
கலப்பு ஈடுபாடு, சிலோன் க்ரெய்ன் எலிவேற்றர்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு காகில்ஸ் மீது பதிவாகியிருந்தது. மேலும், வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

11.01.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறைப்பெறுமதியை பதிவு செய்திருந்தது. S&P SL20 நேர் பெறுமதியை பதிவு செய்திருந்தது. புரள்வு ரூ. 531 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சென்ரல் பினான்ஸ் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு லயன் பிரெவரி மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, அமானா வங்கி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

12.01.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 968 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சிலோன் கோல்ட்ஸ் ரோர்ஸ், மெல்ஸ்டாகோர்ப், டீஜே லங்கா மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி மற்றும் சென்ரல் பினான்ஸ் கம்பனி மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு டோக்கியோ சீமெந்து கம்பனி மற்றும் HNB அஷ்யூரன்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.63% மற்றும் 0.44% சரிவை பதிவு செய்திருந்தன. சராசரி தினசரி புரள்வு ரூ. 832 மில்லியனாகப் பதிவாகியிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .