2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 28.05.2018 - 01.06.2018

Editorial   / 2018 ஜூன் 04 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

28.05.2018  

டிஸ்டிலரீஸ், ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி, நேஷன்ஸ் ட்ர்ஸ்ட் வங்கி மற்றும் வலிபல் ஃபினான்ஸ் உரிமை பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு டீஜே லங்கா மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவில் ஈடுபட்டனர்.  

29.05.2018 

பொசொன் பௌர்ணமி விடுமுறை தினம் காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.  

30.05.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், எயிட்கன் ஸ்பென்ஸ் மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.6 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி மற்றும் டீஜே லங்கா மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.  

31.05.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், மெல்ஸ்டாகோர்ப் மற்றும் ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 2.3 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, டயலொக் அக்ஸியாடா, கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமை மற்றும் வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. மேலும், வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  மாதத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 2.03% மற்றும் 2.54% சரிவைப் பதிவு செய்திருந்தன.  

01.06.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 839 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமை மற்றும் வாக்குரிமையற்ற பங்குகள், சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், அஸ்கொட் ஹோல்டிங்ஸ், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, சிரி ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ் மற்றும் செலான் வங்கி மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு டோக்கியோ சீமெந்து கம்பனி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 1.03% மற்றும் 1.09% சரிவை பதிவு செய்திருந்தன. தினசரி சராசரி புரள்வு ரூ. 1.3 பில்லியனாகப் பதிவாகியிருந்தது.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .