2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும்’

Editorial   / 2018 ஜூன் 13 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பேரணி நடந்தது. பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியை, நடிகையும் யுனிசெப் அமைப்பின் தூதருமான த்ரிஷா கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, “எளிதில் சுரண்டப்படக் கூடியவர்களாகக் குழந்தைகள் இருப்பதால் தான், அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அனைவரும் ஒன்றாக இணைந்து, குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுவதை ஒழிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்காக, தொழிலாளர் நலத்துறைக்கு எனது பாராட்டுகள்:” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .