2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

அஜித் சொன்ன மாற்றம்

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தல அஜித் நடித்த ’விஸ்வாசம்’ திரைப்படம் ஒரு ஜனரஞ்சகமான மசாலா திரைப்படம் என்றாலும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற சென்டிமென்ட் காட்சிகள் பெரும்பாலானோரை கவர்ந்தது. 

இதனால்தான் அந்த திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் வந்து பார்வையாளர்கள் பார்த்தனர்.

இந்த நிலையில் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து அஜித் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு எக்ஷசன் திரைப்படம் என்று கூறப்படுகிறது. 

இதனை அடுத்து இந்த திரைப்படத்திலும் சில சென்டிமெண்ட் காட்சிகள் குறிப்பாக பெண்களை கவரும் வகையிலான காட்சிகள் இருக்க வேண்டும் என்று இயக்குனர் ஹெச்.வினோத்துக்கு அஜீத் பரிந்துரை செய்ததாகவும் அதன் அடிப்படையில் தற்போது கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா வில்லனாக நடித்து வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--