2020 ஜூலை 15, புதன்கிழமை

அதிர்ச்சியளித்த சந்தானம்

Editorial   / 2020 மே 29 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

“டிக்கிலோனா” திரைப்படத்தின் மூன்று லுக்குகள் வெளியாகும் என சந்தானம் ஏற்கெனவே அறித்ததுக்கு அமைய, கடந்த மூன்று நாள்களாக முதல்பார்வை போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான முதல் லுக் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்ட் ஆனது.

இதனையடுத்து, தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி உள்ளது. இந்த லுக்கில் சந்தானம் உடை ஏதும் அணியாமல் நிர்வாணமாக இருப்பது போன்றும் ஒரே ஒரு பாத்திரத்தை மட்டும் அவர் கையில் வைத்து இருப்பது போன்றும் உள்ளது.

மேலும், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் சந்தானத்தை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருப்பது போல் உள்ளது.

இப்போது, அவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் இந்த லுக்கை அதிர்ச்சியுடன் தான் பார்த்து வருகின்றார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X