2020 ஜூன் 01, திங்கட்கிழமை

அம்மாவாகிவிட்டால் நடிப்புக்கு சமந்தா பிரேக்

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகசைதன்யாவைத் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா, சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு, தற்போது, “மஜிலி”, “ஓபேபி சக்க குன்னவே” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில், சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், தாய்மை பற்றிக் கூறியுள்ளார்.

தனக்கு குழந்தை பிறந்த பிறகு, கண்டிப்பாக நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிடுவதாகவும் அப்போது, தன் குழந்தை தான் னக்கு உலகமாக இருக்குமென்றும் கூறியுள்ளார்.

அத்துடன், தன்னுடைய குழந்தைப் பருவத்தில், தான் சில பிரச்சினைகளைச் சந்தித்திருந்ததாகக் கூறியுள்ள சமந்தா, ஆனால் தன்னுடைய குழந்தைக்கு, அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாவண்ணம், கூடவே இருந்து நன்றாக கவனித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X