2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

’அரபிக் கடலில் சுனாமியாக வருவேன்’

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய அழகிப் போட்டியில் அழகிப் பட்டத்தை பெற்ற மீரா மிதுன். தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களிலும் அழகிப் போட்டியை நடத்தப் போவதாகச் சொல்லி, பலரிடமும் பணமோசடி செய்ய விவகாரம்  தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். நடிகரும்; இயக்குநருமான சேரனை அசிங்கப்படுத்துவதாக நினைத்து மீரா மிதும் பொய்யை அவிழ்த்துவிட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.

எனினும், வெளியில் வந்ததும், மற்றவர்களைப் போல, தனக்கும் பட வாய்ப்புகள் குவியும் என நினைத்தார். ஆனால், பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. நம்ம வீட்டுப் பிள்ளை ப்டத்தில் நடித்திருந்தார். ஆனால், என்ன காரணத்தாலேயோ, அவர் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இதையும் அவர் கடுமையாக விமர்சிக்க, அக்னி சிறகுகள் படத்தில் நடிக்கவிருந்த வாய்ப்பும் பறி போனது.

இதனால், தமிழ் சினிமா பட உலகை கடுமையாக விமர்சிக்கத் ஆரம்பித்த மீரா மிதுன். ஒரு கட்டத்தில், தமிழ் சினிமாவில் அவருக்கு மொத்தமாக வாய்ப்பே இல்லை என்று ஆனதும், தற்போது, மும்பைக்கு படை எடுத்திருக்கிறார்.

ஹிந்தி படங்களில் வாய்ப்பு தேடி அலையும் அவர், முக தெரிவுகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவர் ஹிந்தி பட வாய்ப்புக்காக காத்திருப்பதை, செய்தியாக வெளியிட்டிருக்கிறார்.

“வங்கக் கடலில் சுனாமியாக புறப்பட்டு வர நினைத்திருந்த எனக்கு, தமிழ் பட உலகில் வாய்ப்பு இல்லை. அதனால், அரபிக் கடல் ஓரம் போயிருக்கிறேன். அங்கே சுனாமியாக வெற்றிப்பெற்று வருவேன்” என கூறியிருக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .