2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

இணையத்தில் வலிமை?

Editorial   / 2020 ஜூன் 26 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தல அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்தது.

திடீரென ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாரானால் அந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்றும், அதுமட்டுமின்றி போனிகபூர் தயாரிக்கும் மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாகவும் செய்தி வெளியானது.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரித்து வரும் ’வலிமை’, ‘மைதான்’ மற்றும் ’வக்கீல் சாஹிப்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பில்லை என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

தன்னுடைய 40 ஆண்டுகால தயாரிப்பு அனுபவத்தில் தான் இதேபோல் பல பிரச்சினைகளை சந்திக்க உள்ளதாகவும் ஆனால் திரையரங்குகளில் ரிலீஸ் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .