2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்

Editorial   / 2020 செப்டெம்பர் 18 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாஜக பிரமுகரும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரின் மறைவை கேட்டு இதயமே நொறுங்கி விட்டது என கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராமுக்கு பல ஆண்டுகளாக மேக்கப் மேனாக இருந்தவர் சம்பத். இவர் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். 

இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியதாவது:-

'எனது மேக்கப்மேன் சம்பத் அண்ணா அவர்கள் திடீரென மரணம் அடைந்து விட்டார். இந்த செய்தியை கேட்டு எனது இதயமே நொறுங்கி விட்டது. நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் அண்ணா.

சம்பத் அண்ணா எனக்கு பல வருடங்களாக மேக்கப்மேனாக இருந்தார். மிகவும் எளிமையானவர் மற்றும் அன்பானவர். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்' என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--